கோவை: கோவையில் நேற்று எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை பேரிடம் மேலாண்மைத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 2) இரவு விடிய விடிய மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் மொத்த 721.60 மி.மீ மழை பெய்துள்ளது.
கோவையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவுகள் குறித்து விவரம் வருமாறு:
விமானநிலையம் பீளமேடு – 78.30 மி.மீ.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) – 69 மி.மீ.
பெரியநாயக்கன் பாளையம் – 62.40 மி.மீ.
அன்னூர் – 75.20 மி.மீ.
சூலூர் – 76.40 மி.மீ.
வாரப்பட்டி – 33 மி.மீ.
தொண்டாமுத்தூர் – 48 மி.மீ.
சிறுவாணி அடிவாரம் – 22 மி.மீ.
மதுக்கரை தாலுகா – 33 மி.மீ.

போத்தனூர் ரயில் நிலையம் – 54 மி.மீ.
மேட்டுப்பாளையம் – 15 மி.மீ.
பில்லூர் அணை – 7 மி.மீ.
கோவை தெற்கு தாலுகா – 21.20 மி.மீ.
பொள்ளாச்சி தாலுகா – 6 மி.மீ.
மக்கினம்பட்டி – 19.50 மி.மீ.
கிணத்துக்கடவு – 12 மி.மீ.
ஆனைமலை தாலுகா – 8 மி.மீ.
ஆழியார் – 7.60 மி.மீ.
சின்கோனா – 37 மி.மீ.
சின்னக்கலார் – 26 மி.மீ.
வால்பாறை PAP – 6 மி.மீ.
வால்பாறை தாலுகா – 4 மி.மீ.
சோலையார் – 1மி.மீ.
மொத்த மழை அளவு: 721.60 மி.மீ.
சராசரி மழை அளவு: 31.37 மி.மீ.
பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கையின் படி நேற்று பீளமேடு ஏர்போர்ட் சுற்றுவட்டாரத்தில் அதிகபட்ச அளவாக 78.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்த பட்ச அளவாக சோலையாரில் 1 மி.மீ மழை பதிவாகியுள்ளது