கோவை: பேரூர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள் “பேரூரா பட்டீசா” என்று கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் இழுத்தனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற கோவிலான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் துவங்கியது.
நேற்று இரவு பட்டீசுவரர் திருக்கல்யாண உற்சவம் முடிந்த நிலையில், இன்று அலங்கரிக்கப்பட்ட நிலையில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் தனித் தனியே தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து பேரூர் ஆதீனம் மருவாசல அடிகளார் தேறினை வடம் பிடித்துக் கொடுக்க, பக்தர்கள் “பேரூரா, பட்டீசா” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தோரோட்டம் சிறுவாணி சாலை மற்றும் கோவிலின் மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர்நிலைத் திடலை அடைந்தது.