கோவை: கடந்த 5 நாட்களாக விலை குறைவைச் சந்தித்து வந்த தங்கம் இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.
தினமும் விலையில் புதிய உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் கடந்த 3ம் தேதி ஒரு கிராம் ரூ.8,560க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4ம் தேதி முதல் தங்கம் விலை குறையத் தொடங்கியது.
விலைப்பட்டியல்
- ஏப்ரல் 4 – ரூ.8,400
- ஏப்ரல் 5 – ரூ.8,310
- ஏப்ரல் 6 – ஞாயிற்றுக்கிழமை
- ஏப்ரல் 7 – ரூ.8,285
- ஏப்ரல் 8 – ரூ.8,225
அதன்படி, 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.335 குறைந்தது. இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் தங்கம் விலை குறைந்ததாகவும், வரும் காலங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறிவந்தனர். இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இன்று தங்கம் விலை திடீரென கிராமுக்கு ரூ.65 அதிகரித்துள்ளது.

இன்றைய விலை
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,780க்கும் ஒரு பவுன் ரூ.54,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் மட்டும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.102க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.