கோவை: கோவை மாவட்ட நீர்வளத்துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் நீர்வளத்துறை கண்காணிப்பு அலுவலகங்களில் காலியாக உள்ள மூன்று (ஈப்பு) ஓட்டுநர் பணியிடத்திற்கு ஊதிய ஏற்ற முறை – Level 8 (Rs.19,500-Rs.71,900) தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர, இதர தகுதியுள்ள நபர் தங்களது ஓட்டுநர் உரிமம், வயது சான்று, கல்வி சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டுநர் பணியில் மூன்றாண்டு முன் அனுபவச் சான்று மற்றும் உடற்தகுதிச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம், நீர்வளத்துறை,
பரம்பிக்குளம் ஆழியாறு வடிநில வட்டம்,
பொள்ளாச்சி -3
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30.04.2025
காலிப்பணியிட விவரம்
பட்டியல் வகுப்பினர் ( SC Ex-Serviceman) – 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட (முன்னுரிமையற்றோர்) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னுரிமையற்றோர்) – 2
தகுதிகள்
• கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
• இலகு ரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
• நல்ல உடல் ஆரோக்கியமும் தெளிவான கண்பார்வையும் இருக்க வேண்டும்.
• 01.07.2024 அன்று பட்டியல் சாதியினர் (முன்னுரிமை பெற்றவர்கள்) 37-வயதிற்கு மேற்படாதவராகவும்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -34 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், அனைத்து பிரிவினருக்கும் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
• குறிப்பிட்ட தேதிக்குப்பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.