டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர் டோல்கேட் அருகே, வார இறுதி நாளான நேற்று இரவு போதையில் வந்த இளைஞர்களின் அதிவேக கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டீக்கடை முன்பு நின்று கொண்டு இருந்த வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் மோதி கோர விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இச்சம்பவத்தில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்து உள்ள நிலையில், சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

திருப்பூரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் இன்று இரவு மதுபோதையில் காரில் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து உள்ளனர். கணியூர் டோல்கேட் அருகே உள்ள ஒரு பேக்கரி மற்றும் டீக்கடை முன்பு தங்களது காரை நிறுத்திவிட்டு, அங்கே டீ சாப்பிட்டுக் கொண்டு இருந்த மற்றும் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் மீது அந்த அதிவேகக் கார் திடீரெனப் பாய்ந்து உள்ளது.

Advertisement

​கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 1 கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி நின்றது. இந்த கோர விபத்தில் டீக்கடை டீ அருந்து கொண்டு இருந்த இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கு இருந்தவர்கள் படுகாயம் அடைந்த பெண்களை மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்த சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், இளைஞர்களின் வாகனம் கண்மூடித்தனமாக வந்து மோதும் காட்சியும், அங்கு இருந்தவர்கள் அலறி காட்சிகளும் பதிவாகி உள்ளன.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

வார விடுமுறை நாட்களான சனிக்கிழமைகளிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருப்பூரில் இருந்து கோவை எல்லைக்குள் வரும் மதுபோதை இளைஞர்களின் அட்டகாசம் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருவதாகவும், காவல்துறையினர் இதுபோன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கனமழை முன்னெச்சரிக்கை- கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வுக்கூட்டம்…

கோவை: கோவையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, அடுத்த சில நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவை மாநகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...