அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.

கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் – வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் கழிவுநீர் வாய்க்காலில் நீர் கரைபுரண்டு ஓடியதால், ஆபத்தை உணராமல் வாகனங்களை இயக்க முயன்றவர்களைச் சுற்றி இருந்தவர்கள் அலறித் தடுத்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

கோவை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே உள்ள வாய்க்காலில் நீர்வரத்து பெருமளவில் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

​வெள்ளநீர் சாலையை மூடி, அபாயகரமான வேகத்தில் பாய்ந்து சென்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் கடந்து செல்ல முடியாமல் நின்றன.

அப்போது, சீறிப் பாய்ந்த வெள்ள நீரைக் கடந்து செல்ல முயன்ற சில வாகன ஓட்டிகளை அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாகச் சூழ்ந்து தடுத்து நிறுத்தினார்கள்.

​அங்கிருந்த நபர் ஒருவர், “அண்ணா போகாதீங்க மாட்டுக்கு நீங்க போகாதீங்க அண்ணா! எல்லாம் அடிச்சு இழுத்துட்டு வருது, தேவையில்லாம போய் மாட்டாதிங்க!” எனச் பதற்றத்துடன் அலறி எச்சரித்துத் தடுக்கும் காட்சிகள் அங்கு இருந்தவர்களின் செல்போனில் பதிவாகின.

மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆழம் மற்றும் நீரின் வேகத்தை அறியாமல் வாகனங்களை இயக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

Advertisement

இந்நிலையில், பொதுமக்களின் இந்த சாதுரியமான எச்சரிக்கையால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவாணி அணையில் தொடரும் கனமழை! 30 அடியை கடந்த நீர்மட்டம் – கோவை குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

சிறுவாணி அணை நீர்மட்டம் 30.63 அடியாக உயர்ந்து, கோவை குடிநீர் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Video

கோவையில் தனியார் பேருந்தால் ஏற்பட்ட விபத்து- பொதுமக்கள் வாக்குவாதம்…

கோவை: தனியார் பேருந்தால் வாகன ஓட்டி படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை திருச்சி சாலையில் அதிகவேகமாகச் சென்ற பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், வாகன ஓட்டி...