கோவையில் வேசுக்கோ தீசுக்கோ திருவிழா கோலாகலம்…

கோவை: வேசுக்கோ… தீசுக்கோ… கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு, அம்மனை அழைக்கும் வகையில் பாரம்பரியமாக நடைபெறும் கத்தி போடும் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Advertisement

இதையொட்டி இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் ‘வேசுக்கோ… தீசுக்கோ…’ என கோஷங்களை எழுப்பியபடி, பாரம்பரிய முறைப்படி கத்தி போட்டு ஊர்வலமாகச் சென்றனர்.

விஜயதசமி நாளில் நடைபெறும் இந்த விழாவில், பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக கத்தி போட்டு அம்மனை அழைக்கும் நிகழ்வில் ஈடுபட்டனர். பக்தர்களின் பக்தி உணர்வையும், பாரம்பரிய வழிபாட்டு முறையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

Advertisement

கத்தி போடும் நிகழ்வின்போது சில பக்தர்களின் உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், அவர்கள் காயங்கள் ஏற்பட்ட இடங்களில் திருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடியபடியே ஊர்வலத்தில் தொடர்ந்து பங்கேற்றனர்.

‘வேசுக்கோ… தீசுக்கோ…’ என்ற கோஷங்கள் முழங்க நடைபெற்ற இந்தத் திருவிழாவைக் காண அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற கத்தி போடும் நிகழ்வு, கோவையில் விஜயதசமி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கனமழை முன்னெச்சரிக்கை- கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வுக்கூட்டம்…

கோவை: கோவையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, அடுத்த சில நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவை மாநகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...