Header Top Ad
Header Top Ad

நாளை அக்ஷயதிருதியை… வாங்கினால் பெருகுமாம்; வாங்கும் விலையிலா தங்கம்? இன்றைய விலை!

கோவை: நாளை அக்ஷயதிருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

அக்ஷயதிருதியை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து வளரும் என்பது மக்களிடையே உள்ள ஐதீகம். இதனால் மக்கள் அக்ஷயதிருதியை தினத்தில் நம்பிக்கையோடு தங்கம் வாங்கி வருகின்றனர்.

நகை விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளை இந்த நாளில் வழங்குகின்றனர். நாளை பலரும் தங்கம் வாங்க தயாராகி வரும் நிலையில், ஏழை மக்களுக்கு தங்கம் கனவாகிப் போகும் நிலையில் உள்ளது. அதன் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8,980க்கும், ஒரு பவுன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கிராம் ஆபரணத் தங்கமும் பவுனுக்கு ரூ.240 விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,435க்கும், ஒரு பவுன் ரூ.59,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.111க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Recent News