டபுள் சந்தோஷம் கொடுத்த அஜித்… சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்…! – VIDEO

விருது மற்றும் பிறந்தநாள் என்று இரட்டிப்பு சந்தோஷம் கொடுத்த அஜித்திற்கு அவரது ரசிகர்களும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குட்பேட் அக்லி திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியது. கார் ரேஸ்களில் பங்கேற்பதற்காக இனி ஒன்றரை ஆண்டுகளுக்கு சினிமாவுக்கு இடைவேளை கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement

அஜித்தின் கலைத்திறமையை பாராட்டி கடந்த மாதம் இறுதியில் மத்திய அரசு சார்பில் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து, மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ்ந்தார்.

இந்த நிலையில், இரட்டை சந்தோஷத்தை கொடுத்த அஜித்துக்கு ரசிகர்கள் சர்ப்ரைஸ் கொடுத்தனர். விருது வாங்கியதையும், பிறந்த நாளையும் ஒரே நேரத்தில் கொண்டாடும் விதமாக, அஜித்திற்கு ரசிகர்கள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

அஜித்தின் பிறந்த நாள் தினத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recent News