கோவை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த 500 தொழிலாளர்கள்!

கோவை: கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி என்று பெயர் எடுத்துக் கொடுத்த தங்களை விட்டுவிட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு பணி வழங்குவதா என்று வேதனை தெரிவித்த தூய்மைப் பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒப்பந்த நிறுவனமானது மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த ஒப்பந்த நிறுவனம் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம், வேலை நேரம், மருத்துவ பலன்கள் பற்றி எதையும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களை இங்கு அழைத்து வந்து வேலை செய்ய வைப்பதாகவும் கூறி கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இதற்கு ஒரு தீர்வு காண வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சிக்குச் சிறந்த மாநகராட்சி என்று பெயர் எடுத்துக் கொடுத்த தங்களை விட்டுவிட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு பணி வழங்குவதா என்று வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து, இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதலான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...