Header Top Ad
Header Top Ad

இன்று ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு!

கோவை: தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.250 விலை அதிகரித்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வைச் சந்தித்துள்ளது.

அக்ஷயதிருதியை முன்னிட்டு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் விலை, கடந்த 4 நாட்களாக ஏற்ற இறக்கமின்றி இருந்து வந்தது.

இதனிடையே நேற்றிரவு தங்கம் விலை அதிகரித்தது. தொடர்ந்து இன்று காலை கிராமுக்கு ரூ.250 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,025க்கும் ஒரு பவுன் ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இதனிடையே இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. தற்போது கிராமுக்கு ரூ.75 அதிகரித்துள்ளது. இன்று மட்டும் மொத்தமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,600 அதிகரித்துள்ளது.

கோவையில் தற்போது 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,100க்கும் ஒரு பவுன் ரூ.72,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோவையில் இன்று 18 காரட் ஆபரணத் தங்கம் விலையும் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ரூ.7,460க்கும் ஒரு பவுன் ரூ.59,680க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.

Recent News

Latest Articles