கோவை: குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிக்காக போத்தனுர் ரயில் பாதையின் ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட போத்தனூரில் ரயில் பாதை அமைந்துள்ளது. இவ்வழியாக குறிச்சி-குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.
இத்திட்டங்களுக்கு ஏதுவாக பாலக்காடு ரயில்வே பாதைக்கு மேற்பகுதியிலும், பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு அடி பகுதியிலும் பாலம் அமைக்கப்படுகிறது.
இதற்காக ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் குமரன், ரயில்வே உதவி கோட்டப்பொறியாளர் புஷ்பதாஸ் ஆகியோர் இருந்தனர்.