கோவை: இந்திய ராணுவம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் கோவையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
பஹல்காம் மற்றும் அதற்கு முந்தைய தாக்குதல்களுக்கு பழிதீர்க்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் ராணுவத்தினர் மற்றும் மாநில போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்திற்குள் வரும், வெளியேறும் பயணிகளின் உடைமைகள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.