கோவை: மத நல்லிணக்கத்தை பறைச்சாற்றும் வகையில் கரகம் ஏந்தி வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் பழங்களை ஊட்டிவிட்டனர்…
கோவை கரும்பு கடை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நேர்த்திக்கடன் செலுத்தும் ஊர்வலம் நிகழ்வு நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள்
பால்குடம் எடுத்தும் அக்னிசட்டி ஏந்தி, கரகம் எடுத்தும் ஊர்வலம் வந்தனர். அவர்களுக்கு கரும்புக்கடை பகுதியில் உள்ள ஜமாத் நிர்வாகிகள் ஆப்பிள், திராட்சை, வாழைபழம், தர்பூசணி போன்ற பழங்களை ஊட்டி விட்டனர். மேலும் ஜூஸ் வகைகள், பிஸ்கட்களை வழங்கினர். மேலும் வெயில் அதிகமாக இருந்ததால் அவர்கள் மேல் தண்ணீரை ஊற்றி குளிரச் செய்தனர். இதற்காக பக்தர்கள் ஜமாத் நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த கோவில் திருவிழா நிகழ்வு மத நல்லிணக்கத்தை பறைச்சாற்றும் வகையில் அமைந்தது.