Header Top Ad
Header Top Ad

கோவையில் பெய்த கனமழை- சாய்ந்த மின்கம்பங்கள்…

கோவை: கோவையில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் கனமழை பெய்ததால், சில இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சாய்ந்தன.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், இன்று காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்த போது, சாலையின் நடுவே இருந்த உயர் மின் அழுத்த கம்பங்கள் திடீரென அடியோடு சரிந்து விழுந்தன.

Advertisement
Lazy Placeholder

ஆயிரக் கணக்கான வீடுகள் நெருக்கமாக அமைந்து உள்ள இப்பகுதியில் ராட்சத மின் கம்பங்கள் சரிந்து வீடுகளின் மீது விழுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்துக்கு முக்கிய காரணம் மின் கம்பங்கள் துருப் பிடித்து பலவீனமாக இருந்தது தான் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால் தான் இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் இப்பகுதியில் தொடர்ந்து அச்சம் நிலவுவதாகவும், அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மரங்களை அகற்றி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Lazy Placeholder

Recent News

Latest Articles