கோவை சிறைக்கைதிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி! முதல் மதிப்பெண் என்ன தெரியுமா?

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய கோவை மத்திய சிறைக்கைதிகள் அனைவரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 23 பேர் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவருமே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் பாஸ்கர் என்ற கைதி 448 மதிப்பெண்கள் பெற்று சிறைவாசிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஹரி கிருஷ்ணன் 430 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தையும், துளசி கோவிந்தராஜன் 429 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழக முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளில் 140 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

Video

Join WhatsApp