கோவை: கோவையில் உள்ள டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையை கல்வி நகரம் என்றே நாம் அழைக்கலாம். ஏனெனில், அந்த அளவுக்கு பள்ளி, கல்லூரிகளின் கட்டமைப்புகள் அதிகம் உள்ள நகரமாக கோவை விளங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் கோவைக்கு உயர்கல்வி பயிலுவதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வருகின்றனர்.
தற்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு உதவும் விதமான பதிவு இது.
கோவையில் உள்ள டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை தற்போது காணலாம்:-
அரசு தொழில்நுட்பக் கல்லூரி – தடாகம் சாலை, வேளாண் பல்கலைக்கழகம் பஸ் நிறுத்தம்
பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி – பீளமேடு
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (CIT) – ஹோப்ஸ் காலேஜ்
அமிர்தா விஸ்வா வித்யாபீடம் – எட்டிமடை
காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம் – காருண்யா நகர், சிறுவாணி
ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (SKCET) – குனியமுத்தூர்
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி – சரவணம்பட்டி
கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி – அரசூர்
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி – வட்டமலைபாளையம்
எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லூரி- வழியம்பாளையம், சரவணம்பட்டி சாலை