கோவை: கோவையில் உள்ள டாப் 5 UPSC தேர்வு பயிற்சி மையங்கள் பற்றிய செய்தியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் தேர்வை குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.,) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படிநிலைகளைக் கொண்டது.
இந்தத் தேர்வுகளை 21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், ஆக வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாகும். அப்படிப்பட்ட இந்தத் தேர்வை யாராலும் அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெற்று விட முடியாது. இதற்கு முறையான பயிற்சி அவசியமாகும்.
கோவையில் யூ.பி.எஸ்.சி., பயிற்சியை சிறப்பாக வழங்கும் டாப் 5 பயிற்சி மையங்களை தற்போது காணலாம்.
சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி, பீளமேடு
கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமி, காந்திபார்க்
சண்முகம் ஐ.ஏ.எஸ் அகாடமி, ராம் நகர்
SA ஐ.ஏ.எஸ் அகாடமி, ராம் நகர்
Unique ஐ.ஏ.எஸ் அகாடமி, காந்திபுரம்
யூ.பி.எஸ்.சி., பயிற்சிக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில பயிற்சி மையங்களில் ஆன்லைன் வாயிலாகவும் பயிற்சி வழங்கப்படுகிறது. CSATக்கு சுமார்ரூ.12,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.