கோவை: கோவை இளையராஜா இசைக்கச்சேரி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மறு தேதி குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவைப்புதூரை அடுத்த விவேகானந்தபுரத்தில் வரும் மே 17ம் தேதி இளையராஜாவின் கச்சேரி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை தொடங்கும் நிகழ்ச்சி 4 மணி நேரம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதும், டிக்கெட் விற்பனையும் தொடங்கியது.
இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் மற்றும் வேறு சில காரணங்களுக்காக இசைக்கச்சேரி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த இசைக்கச்சேரி வரும் மே 31ம் தேதி அல்லது ஜூன் 7ம் தேதி நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.