கோவை: கோவையில் தங்கம் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை நேற்று அதிரடி சரிவைச் சந்தித்தது.
கோவையில் நேற்று காலை பவுனுக்கு ரூ.1,350 குறைந்தது. இதனிடையே நேற்று இரவு மீண்டும் ரூ.1,040 விலை குறைவைச் சந்தித்தது. நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு மொத்தம் ரூ.2,360 குறைந்தது.
இதனிடையே இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது.
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.8,765க்கும், ஒரு பவுன் ரூ.70,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.7,220க்கும், ஒரு பவுன் ரூ.57,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.