கோவை: கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவையில் கடந்த ஒரு வாரமாக மலைப்பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒரு சில நாட்கள் மட்டும் மாநகர பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படுகிறது.
நேற்று மாலை மாநகரப் பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு காணப்பட்டது. இதனிடையே இன்று கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.