கோவை: கோவையில் மே 17ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவித்துள்ளது மின்வாரியம்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வந்தது.
இதனிடையே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று வந்த காரணத்தால் மின்தடை ஏற்படாது என்று மின்வாரிய அதிகாரிகள் நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் தளத்திற்கு பிரத்யேக தகவல் தெரிவித்திருந்தனர். இதுகுறித்த செய்தியும் நமது தளத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாவட்டத்தில் எங்கும் ஒரு நாள் மின்தடை ஏற்படவில்லை. இதனிடையே, தற்போது மீண்டும் ஒரு நாள் மின்தடை தொடங்க உள்ளது. இந்த நாளில் மின் வாரியத்தினர் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
வரும் மே 17ம் தேதி கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் மே 17ல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது:-
டாடாபாத் துணை மின்நிலையம்:
காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம் நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா காலனி
கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளை பெற NCC வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்… குழுவில் இணைய இங்கே க்ளிக் செய்யவும் 👈
ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையம்:
தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை).
பீளமேடு துணை மின்நிலையம்:
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி ரோடு (ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்
ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு ஷேர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் – NCC