கோவையில் ஆண்கள் விடுதியில் செல்போன்கள், லேப்டாப்கள் திருட்டு- சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை: சரவணம்பட்டி பகுதியில் ஆண்கள் விடுதிகளில் செல்போன் லேப்டாப் திருட்டு போன சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

கோவை மாநகர் சரவணம்பட்டியில் உள்ள ஐடி பூங்காவுக்கு அருகே உள்ள இரண்டு ஆண்கள் விடுதிகளில், முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை திருடிச் சென்றுள்ளார்.

Advertisement

இதனை அறிந்த இளைஞர்கள், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், போலீசார், விடுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Recent News