Advertisement

கோவை: நாளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது…
தேனீக்கள் ஒரு அதிசயத்தக்க உயிரினம் ஆகும். இவை மகாரந்தகச்சேர்க்கையில் ஈடுபட்டு பயிர் மகசூலை அதிகரிப்பதுடன் தேனீ சார்ந்த பொருட்களையும் தருகின்றன. இந்த தேனீக்கள் குறித்த மக்களிடையே ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, தேனீக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அன்டன் ஜான்சா என்ற 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தேனீ வளர்ப்பாளரை நினைவு கூறும் வகையில் அவரின் பிறந்த நாளான மே மாதம் 20 அன்று “உலக தேனீ தினம்” கொண்டாடப்படுகின்றது.
இந்த வருடம் 2025-ல் அதன் முக்கிய நோக்கம் “தேனீக்கள் இயற்கை அளித்த ஊட்டச்சத்து உற்பத்தியாளர்கள்” என்ற தலைப்பின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து உற்பத்தியில் தேனீக்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும்.
Advertisement

இதன் தொடர்ச்சியாக தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக வரும் மே மாதம் 20ஆம் நாள் செவ்வாய் கிழமை “உலக தேனீ தினம்” கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தேனீக்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள். தேன் உற்பத்தி மற்றும் அறுவடை குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும்.
மேலும் தேனீ மூலம் மெழுகு சிலைகள் மற்றும் சோப்பு செய்யவும், நெல்லித் தேன் மற்றும் தேன் குல்கந்த் ஆகியவற்றின் தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கமும் வழங்கப்பட உள்ளது. தேனீக்கள் மீதான ஆர்வத்தை அறிய குழந்தைகளுக்கு தேனீக்கள் சார்ந்த பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
விழாவின் இறுதியில் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள். மற்றும் இல்லத்தரசிகள் உட்பட அனைவரும் இந்த உலக தேனீ தின விழாவில் பங்கேற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.