கோவையில் இருந்து பணம் மற்றும் தங்கம் கடத்தல்- கேரள போலிசாரால் மூவர் கைது…

கோவை: கோவையில் இருந்து பணம் மற்றும் தங்கம் கடத்திய மூன்று பேரை கேரளா மாநில காவல் துறையினர் கைது செய்தனர்…

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ரொக்கப் பணமும், 200 கிராம் தங்கமும் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோவையை சேர்ந்த சாகர், மணிகண்டன் மற்றும் சந்தீப் ஆவர். இவர்கள் மூவரும் தங்கத்தையும், பணத்தையும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பணம் மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் யார் ? யாருக்காக ? எங்கு ? இருந்து எங்கு ? கொண்டு செல்ல முயன்றார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

Video

Join WhatsApp