Header Top Ad
Header Top Ad

கோவையில் புதிய தோழி மகளிர் விடுதி- அடிக்கல் நாட்டிய முதல்வர்…

கோவை: கோவையில் புதிதாக அமைய உள்ள நவீன வசதிகளுடன் கூடிய தோழி மகளிர் விடுதிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட தோழி மகளிர் விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்த படி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். மேலும் பல்வேறு மாவட்டத்தில் தோழி மகளிர் விடுதி கட்டுமான பணிகளுக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

Advertisement

அதன்படி கோவை மாவட்டத்தில் விளாங்குறிச்சி பகுதியில் டைடல் பார்க் செல்லும் வழியில் 15.95 கோடி மதிப்பீட்டில் 50 சென்ட் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய தோழி மகளிர் விடுதி அமையப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த விடுதியில் 24 மணி நேர பாதுகாவலர் வசதி, பயோமெட்ரிக் நுழைவு முறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிசிடிவி வசதி, WiFi வசதி,மின் தூக்கி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த விடுதி அமைக்கப்பட உள்ளது.

Recent News