கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ – மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்…

கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. கோவை மாநகரின் மத்திய பகுதியில் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது.

Advertisement

இந்நிலையில் தற்பொழுது சுமார் 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்து உள்ளது. இது குறித்து மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட இ-மெயில் மிரட்டலைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு மோப்ப நாய்கள் கொண்டு அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக முக்கிய அறைகளிலும், வாகனம் நிறுத்தும் இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகை தந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுடைய பதற்றம் நிலவியது.

Advertisement

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகத்திற்குள் நுழைய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மிரட்டல் விடுத்தது யார்? அதன் பின்னணி என்ன ? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒரு புரளியா ? மிரட்டலா ? அல்லது உண்மை மிரட்டலா ? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மின்னல் அனுப்பப்பட்ட ஐ.பி முகவரி கண்டு அறியும் முயற்சியில் சைபர் கிரைம் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

கோவையில் துணை ஜனாதிபதி வரும் பொழுது ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்- NIA விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தல்…

கோவை: துணை குடியரசுத் தலைவர் வரும்பொழுது பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்ற சம்பவத்தை NIA விசாரிக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.துணைக் குடியரசுத் தலைவர் சி...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group