Header Top Ad
Header Top Ad

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் TNPSC தேர்வு- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா…

Advertisement

Advertisement
கோவை: கோவையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது…

கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சமீபத்தில் TNPSC குரூப் 1 தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 5 சாதனையர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

புது தில்லியின் முன்னாள் யுபிஎஸ்சி உறுப்பினரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி தலைமை விருந்தினராகப் பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்ற வணிக வரி உதவி ஆணையர் மதுவர்ஷினி, கிராமப்புற மேம்பாட்டு உதவி இயக்குநர் ஹர்ஷா மற்றும் டிஎஸ்பி பியூலா வயலட் ஆகியோரைப் பாராட்டினார்.

Advertisement

Single Content Ad

பேராசிரியர் இ.பாலகுருசாமி அகாடமியின் சாதனையாளர்கள் மற்றும் அதன் மாணவர்களுக்கு உரையாற்றினார். குடிமைப் பணி என்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதுகெலும்பு என்றும், மக்களுக்கு சேவை செய்வதே அரசு ஊழியர்களின் அடிப்படைக் கடமை என்றும் அவர் கூறினார்.

நல்லாட்சியை வழங்குவதில் அதன் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், மக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் பாலமாக அரசு ஊழியர்கள் உள்ளனர் என்றும், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது என்ற இந்திய அரசின் இலக்கை அடைய திறமையான அரசு ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள் என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த மகத்தான கனவையும் விருப்பத்தையும் நனவாக்க, அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், இல்லையெனில் அது ஒரு அறிக்கையாகவே இருக்கும்.

இந்தியா தனது கல்வி முறை, சுகாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்வது நமது நாட்டை அரசாங்கம் விரும்புவது போல வளர்ந்த நாடாகக் மாற்ற உதவும் என்று தெரிவித்தார்.

அரசு ஊழியர்களாக மாற விரும்புவோர் புறநிலையாக முடிவுகளை எடுக்கவும், சமூகத்தின் கோரிக்கைகள்/பிரச்சினைகளுக்கு விரைவாக பதிலளிப்பவராகவும், பணியில் மிகுந்த வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், பொறுப்புணர்வுள்ள நபராக இருக்கவும் கேட்டுக்கொண்டார். தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லக் கற்றுக்கொள்ளவும், எப்போதும் ஒழுக்க ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் வலிமையான நபராக இருக்கவும் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில், கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் மையத் தலைவர் அருண் செந்தில்நாதன் மற்றும் விருந்தினர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Recent News

Latest Articles