கோவை அருகே குடிநீர் குழாய் உடைந்து பல அடி உயரத்துக்கு எழும்பிய குடிநீர்…

கோவை அருகே திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைந்து பல அடி உயரத்திற்கு எழும்பி அருவி போல கொட்டிய குடிநீர் வீணானது…

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து சாமண்ணா நீரூந்து நிலையத்தில் நீர் உறிஞ்சப்பட்டு ராட்சத குழாய்கள் மூலமாக திருப்பூர் மாநகராட்சிக்கு மேட்டுப்பாளையம், அன்னூர்,அவிநாசி வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று மதியம் திடீரென மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே இந்த ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

Advertisement

இதனால் வெளியேறிய குடிநீர் பல அடி உயரத்திற்கு மேலே எழும்பி அருவி போல குடிநீர் கொட்டியது. இதனால் அந்த பாலம் முழுவதும் குடிநீரால் நிரம்பியது.

இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அருவி போல குடிநீர் குழாயில் இருந்து கொட்டும் தண்ணீரை புகைப்படம் எடுத்தும்,வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

Advertisement

குழாய் உடைப்பால் பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக சென்றது.இதுகுறித்து அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

Recent News

வடகிழக்கு பருவமழை- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வலியுறுத்தல்…

கோவை: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146.04 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும்,...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group