கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை. கோவையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிவு காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவையின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்கும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று கோவை குற்றாலத்துக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.