Header Top Ad
Header Top Ad

மகிழ்ச்சி திட்டத்தை கோவையில் துவக்கி வைத்த டிஜிபி…

கோவை:தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் காவல்துறையினர்களுக்கான மகிழ்ச்சி எனும் திட்டத்தை கோவையில் துவக்கி வைத்தார்…

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.


கோவை மாநகர் சேலம் மாநகர் திருப்பூர் மாநகர் காவல்துறையினருக்காக இத்திட்டமானது தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காவலர் மனநல கையேடு மற்றும் நல்வாழ்வு அலைபேசி எண் ஆகியவை வெளியிடப்பட்டன.

Advertisement

இந்த நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி, கோவை மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட திருப்பூர் சேலம் மாவட்டத்தை சார்ந்த காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்தத் திட்டம் தொடர்பான மையம் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.

Recent News