கோவை: புகார் அளித்தால் அதனை விசாரிக்க வேண்டும் என்றும் விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் காவல்துறையினருக்கு எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்…
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மாநகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்பி வேலுமணி, கோவை மாநகராட்சி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும்
அடிப்படை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
திமுக தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் தரவில்லை என்றும் அனைத்து தரப்பு மக்களும் சிரமத்தில் உள்ளார்கள் என்றார். கைத்தறி விசைத்தறி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தால் தான் மாற்றம் கிடைக்கும் என பொதுமக்கள் பலரும் கூறுவதாக தெரிவித்த அவர் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.
சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுள்ளது என கூறிய அவர்
முதியவர்களை கொலை செய்து நகைகள் எடுத்து செல்லப்படுகிறது,
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுதெல்லாம் கோவையில் ஆர் எஸ் புரம் காவல் நிலையம் முதலிடம் பெற்றது, ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
எம்ஜிஆர், அம்மா (ஜெயலலிதா) இருக்கும் பொழுது மத்திய அரசிடம் இருந்து அதிக நிதிகள் வாங்கப்பட்டு வந்தது என்றும் மெட்ரோ வர அம்மா(ஜெயலலிதா) காரணம் என்றும் நான் அமைச்சராக இருக்கும் பொழுது மற்ற மாநிலங்களில் கட்டபடாத வீடுகளை கூட இங்கு கட்டினோம் என்றார்.
நடந்தாய் வாரி காவேரிக்கு நிதி வாங்கி தந்தவர் எடப்பாடியார் என்றார்.
பருவமழை துவங்கி விட்டது, சாலைகள் குண்டும் குழியுமாய் உள்ளது இதனால் மக்கள் அவதிப்பட போகிறார்கள் என்றும் எந்த நீர் நிலைகளும் தூர்வாரப்படவில்லை என்றும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறிய அவர்
இது சம்பந்தமாக திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம் என்றார்.
தனக்கு வந்த கொலை மிரட்டல் சம்பந்தமாக மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது, இதனை செய்திகளில் விளம்பரப்படுத்தியது வருத்தம் அளிக்கிறது என்றார். யாருக்கு இது போன்ற மிரட்டல் வந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாநகராட்சியில் எந்த வேலைகளும் செய்யப்படுவதில்லை, ஆனால் வரிகள் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர் இது சம்பந்தமாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.