கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை- சுண்ணாம்பு கால்வாய் அணைகட்டு திறப்பு

கோவை: கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் அணைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது…

Advertisement

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது.

அதே சமயம் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலைக்கு மேல் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நொய்யல் ஆற்றில் அதிகமான நீர் வந்ததால் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காலவாய் அணைக்கட்டு தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

Advertisement

இது போன்ற சமயங்களில் பொதுமக்கள் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp