கோவையில் விவசாயிகளுக்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் துவக்கம்…

கோவை: கோவையில் விவசாயிகளுக்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனங்கள் தமிழ்நாடு அரசு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் 75 லட்சம் மதிப்பில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் வாகனத்தில் உள்ள பரிசோதனை கருவிகள் குறித்து வேளாண்மைதுறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த வாகனம் முன்கூட்டியே எந்தெந்த கிராமங்களுக்கு செல்கிறது, என்ற தகவல்களை அந்தந்த கிராம விவசாயிகளுக்கு தகவலாக அளிக்கப்படும் என்றும் மண் பரிசோதனைக்கான கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் பரிசோதனை முடிவுகள் சான்றிதழ் அட்டைகளாக மாலைக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp