Header Top Ad
Header Top Ad

கமலஹாசன் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பாதீர்கள்- கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசம்…

கோவை:

Advertisement
Lazy Placeholder

கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பது தான் பல அரசியல் தலைவர்களின் முதல் வேலையாக இருக்கிறது, நக்சலைட்டுகளால் முன்னாள் மந்திரி எல்லாம் கொல்லப்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று தெரிவித்தார். அர்பன் நக்சலைக்சம் எங்கும் பரவி வருவதாகவும் இது தேச பக்தர்களின் நலனுக்கு எதிரானது என்றும் தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு தந்தாலும் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை என்றும் தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் தமிழகத்தின் ஆளுநர் நேர்மையானவர் அவரது கடமைகளை சிறப்புடன் செய்கிறார் என தெரிவித்தார். அதே சமயம் அவருக்கான ஒத்துழைப்பை மாநில அரசு நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நாடெங்கும் தற்பொழுது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். டாஸ்மாக் பிரச்சனை அதிகமாகி வருவது வருத்தத்திற்குரியது என்றும் அதை காட்டிலும் கஞ்சா அதிகமாகி பரவி வருகிறது தமிழக அரசு கஞ்சாவை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் நிதி குறித்து உச்ச நீதிமன்றம் இரு வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement
Lazy Placeholder

ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு என்றும் மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா என கேள்வி எழுப்பினார். இதுவரை இல்லாத ஒரு மொழிபெயர்ப்பை தற்பொழுது தருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
கமலஹாசன் எப்பொழுதாவது ஒன்றை ஒழுங்காக கூறி இருக்கிறாரா என கேள்வி எழுப்பிய அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்ததாகவும் ஆனால் தற்பொழுது திமுகவுடன் இருப்பது தான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறார் என தெரிவித்தார். இவருக்கு எது நன்மை பயக்கிறதோ அது தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று நினைத்தவரை பற்றி என்னிடம் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் என கூறினார்.

கமலஹாசனின் கன்னட மொழி விவகாரம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த பதவிக்காக கமலஹாசன் கூறி இருப்பதாகவும் கமலஹாசன் தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கின்ற மனிதராக இருப்பதாக சாடினார். அதே போன்று சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் வந்தது என்று கூறினால் ஏற்றுக் கொள்வோமா எனவே பேசுகின்ற பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். முருக பக்தர் மாநாட்டிற்கு பாதுகாப்பு தருவது மாநில அரசின் வேலை என தெரிவித்தார்.

Recent News

Latest Articles