Header Top Ad
Header Top Ad

கோவையில் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள எச்சரிக்கை…

கோவை: குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்…

Advertisement
Lazy Placeholder

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அரசு பள்ளிகளில் இன்றைய தினமே இலவச பாட புத்தகங்கள் சீருடைகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 2025 – 26 கல்வி ஆண்டுக்கான பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் . மாணவ – மாணவியருக்கு இன்று சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது என்றும். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 1,187 பள்ளிகளிலும் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களால் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு இந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு இருக்கிறது என்றார். மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடர்ந்து சேர்க்கை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்றும் அரசு பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

ஜூன் இறுதி வரை சேர்க்கை நடைபெறுகிறது என்றார். அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக, குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு செயற்கை மறுக்கப்படுவதாக புகார் எழுந்து இருக்கிறது என்ற கேள்விக்கு பதில்ன்அளித்த அவர், இதுபோன்று பள்ளிகளில் நடைபெறுவதாக தகவல் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுபோன்ற புகார்கள் எழுந்ததை அடுத்து , பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து அதற்கான அறிவுரை வழங்கி இருக்கிறோம் என்றார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறித்து அதிக அளவிலான, பாதிப்புகள் இல்லை ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் போது, முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிந்து செல்வது நல்லது தான். அதனால் மருத்துவமனை வளாகத்திற்குள் மாஸ்க் அணிய வேண்டும் என கூறியிருக்கிறார்கள் என்று கூறினார்.

Advertisement
Lazy Placeholder

Recent News

Latest Articles