கல்வி நிறுவனங்களில் சாதி பெயர்கள்- கண்டன பிரச்சாரம் துவங்கும் என கோவையில் திராவிடர் களம் அறிவிப்பு…

கோவை: கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி மற்றும் சமூக அடையாளங்களை நீக்க வேண்டும் அல்லது அந்த கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் தளம் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
அளித்தனர்…

கல்வி நிறுவனங்களில் சாதிய அடையாளங்களை நான்கு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு சாதிய அடையாளங்களை அகற்றாத கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி திராவிடர் தளம் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நீதிமன்றம் கூறியதை நடைமுறைப்படுத்தாவிட்டால் அந்தந்த கல்வி நிறுவனங்கள் முன்பு தங்களது பிரச்சாரம் துவங்கும் என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp