கோவை: தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய ரூ.4,200 கோடி கல்வித் தொகையை முறையாக வழங்காத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து, கோவையில் தேசிய தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய ரூ.4,200 கோடி கல்வித் தொகையை முறையாக வழங்காத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து, கோவையில் தேசிய தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் மாணவர்களுக்கு கல்வி உரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை முடிவாகவே மறுத்து வருகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய ரூ.4,200 கோடியை வழங்காததற்கான காரணமாக, தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்கவில்லை என்றும், இந்தியை ஏற்க தயாராக இல்லையென்றும் அதிகார பூர்வமாக தெரிவித்து உள்ளனர். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். மேலும், புதிய கல்விக் கொள்கை என்பது மக்களை முடக்கும் ஒரு திட்டமாகவே மாறி உள்ளது. இது மாணவர்களை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு சூழ்ச்சி. அரசு பள்ளிகள் மீண்டும் துவக்கப்பட்டு உள்ள இந்த கட்டத்தில், லட்சக் கணக்கான மாணவர்கள் கல்வி உரிமையை இழந்து சாலைகளில் நிற்கும் நிலைக்கு வந்து உள்ளது என்றும், இச்சூழ்நிலைக்கு பொறுப்பு ஏற்க வேண்டியது ஒன்றிய பா.ஜ.க அரசே மாணவர்கள் கல்வி கற்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த அரசு செயல்படுகிறது எனக்கூறி போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பி ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தனர்.