கோவை- படிப்பு தான் மிகவும் சுலபமானது, படித்து வேலைக்கு செல்லும் போது தான் படிப்பின் அருமை தெரியும் என கோவையில் மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டும் விதமாக உரையாற்றிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்…
படிப்பு தான் மிகவும் சுலபமானது, படித்து வேலைக்கு செல்லும் போது தான் படிப்பின் அருமை தெரியும்- மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டும் விதமாக உரையாற்றிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்…
இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி Prayerல் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அனந்தலட்சுமி
” நன்கு படித்து வேலைக்கு செல்ல வேண்டும் வேலைக்குச் சென்றால்தான் படிப்பின் அருமை தெரியும் இருப்பதிலேயே மிகவும் சுலபமானது படிப்பு தான் தற்பொழுது உள்ள நிலையை காட்டிலும் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்” என்று பேசினார்.
பலரும் கஷ்டப்பட்டு படித்து முன்னேற வேண்டும் என்று கூறும் போது படிப்பு தான் சுலபமான ஒன்று என்று தலைமை ஆசிரியர் பேசியது மாணவர்கள் மத்தியில் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்தது.
வீடியோ காட்சிகள்