கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் நாளை மறுநாள் 06.06.2025 பிற்பகல் 3.00 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான சான்றுகள், அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அரசு சார்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெறவும்கல்விக் கடன் சார்ந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை மையத்தை 9487047568 என்ற கைப்பேசி எண்ணிலும் 1800 425 0085 கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.