தொடர்ந்து உயர்வு! கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!

கோவை: தங்கம் விலை கடந்த 6 நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள நிலையில், கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை தொடர்ச்சியாக புதிய வரலாறு படைத்து வருகிறது. கடந்த 6 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

கடந்த மே மாதம் 28ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,935க்கு விற்பனை செய்யப்பட்டது. 29ம் தேதி சற்றே சரிவைச் சந்தித்து கிராம் ரூ.8,895க்கு விற்பனையானது.

பின்னர் கடந்த 30ம் தேதி முதல் விலை உயரத் தொடங்கியது. அன்றைய தினம் முதல் ஜூன் 1ம் தேதி வரை கிராம் ரூ.8,920க்கும், ஜூன் 2ம் தேதி கிராம் ரூ.8950க்கும், 3 மற்றும் 4ம் தேதிகளில் கிராம் ரூ.9080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இதனிடையே இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

கோவையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.9,090க்கும் ஒரு பவுன் ரூ.72,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. கோவையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.114ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.