Header Top Ad
Header Top Ad

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: யாரெல்லாம் மாஸ்க் போடணும்? – அமைச்சர் விளக்கம்!

கோவை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பிட்ட மக்கள் மாஸ்க் அணிந்து செல்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Advertisement
Lazy Placeholder

கொரோனா பாதிப்பு குறித்து பதற்றப்பட வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இவர்கள் தொண்டைவலி, சலி, காய்ச்சலுடன் குணமாகிவிடுகிறார்கள். அந்தந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்

பல்வேறு நோய் பாதிப்புள்ளவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பொது இடங்களுக்குச் செல்கையில் மாஸ்க் அணிய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
Lazy Placeholder

நாங்களும் அதையே தான் அறிவுறுத்தி வருகிறோம். அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், சுத்தமாக இருத்தல் நல்லது

என்று அமைச்சர் கூறினார்.

Recent News

Latest Articles