காளான் வளர்ப்பு மூலம் சம்பாதிக்க வேண்டுமா? கோவையில் TNAU வழங்கும் பயிற்சி!

கோவை: கோவையில்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Advertisement

ஜூன் 2025 மாதத்திற்கான பயிற்சி 5 வியாழக்கிழமை அன்று அளிக்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விழைவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) (வரி கட்டணம் உட்பட) நேரிடையாக செலுத்த வேண்டும்.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி நேரம்:

Advertisement

காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை.

மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422-6611336, 0422-6611226
அலைபேசி: 9629496555; 6379298064
மின்னஞ்சல்: pathology@tnau.ac.in

இவ்வாறு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஜெ., ஆத்மா இபிஎஸ்க்கு தண்டனை கொடுத்துள்ளது: கோவையில் செங்கோட்டையன் பேட்டி!

ஜெயலலிதா ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.