சிலம்பத்தில் அசத்தல் மதுரையில் விருது வாங்கிய கோவை மாணவிகள்!

கோவை: சிலம்பத்தில் சிறந்து விளங்கிய கோவை மாணவிகள் இருவருக்கு மதுரையில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா கடந்த 2ம் தேதி மதுரை யாதவா கல்லூரியில் நடைபெற்றது.

இதில் சிலம்பக் கலையில் சிறப்பான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்காக கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகக் கல்வி பயின்று வரும் நீனாஸ்ரீக்கு இளைய கலைமணி விருது வழங்கப்பட்டது. மேலும், பதக்கம், மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது.

இதேபோல் சிலம்பத்தில் தனித்திறனைக் கொண்டுள்ள அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு துறை மாணவி
நிதினாவுக்கு ரைசிங் ஸ்டார் சிலம்பம் விருது வழங்கப்பட்டது.

Advertisement

விருதுகளுடன் கோவை திரும்பிய மாணவிகள் இருவருக்கும், பெற்றோர் மற்றும் சக மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்/பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது....

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.