கோவை: ஆழியாறு-வால்பாறை சாலையில் செல்வோருக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக உள்ளது. தற்போது மழை ஓய்ந்த நிலையில், மீண்டும் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இதனால் வனத்துறை சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் ஆழியாறு-வால்பாறை சாலையில் செல்வோர் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும், காட்டு யானையைப் பார்த்தால் செல்பி அல்லது புகைப்படம் எதுவும் எடுக்கக் கூடாது என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.