Header Top Ad
Header Top Ad

தயாராக இருங்கள்… கோவை, நீலகிரி உட்பட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!

கோவை: மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, நீலகிரி உட்பட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் மிக கனமழைக்கு (ஆரஞ்சு அலெர்ட்) வாய்ப்புள்ளதாகவும், அதே நாட்களில், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு (மஞ்சள் அலெர்ட்) வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே மேற்கூறிய 7 மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை முக்கிய உத்தரவுகளை பீறப்பித்துள்ளது.

அதில், மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் பேரிடர் கால நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மழையை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்,

7 மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புப் பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும், எதிர்பாராத விதமாக பேரிட ஏற்பட்டால் உடனே மாநில பேரிடர் மேலாண்மைத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தற்போது பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Recent News