Header Top Ad
Header Top Ad

மாஸ் ப்ளான்; உக்கடம் பேருந்து நிலையத்திற்கு ஒப்புதல்… டெண்டர் கோரியது மாநகராட்சி!

கோவை: உக்கடம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதற்கான டெண்டர் கோரியது மாநகராட்சி.

கோவையில் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்று உக்கடம் பேருந்து நிலையம். இப்பகுதியில் புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின், பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கோவையில் அறிவித்தார்.

தற்போது அமைந்துள்ள பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதோடு, எதிரோ உள்ள காலி இடத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதுவும் திட்டம்.

தற்போது அமைய உள்ள பேருந்து நிலையத்தில் பஸ்-பே, 32 கார்கள் மற்றும் 100 பைக்குகளை நிறுத்த வசதியான பார்க்கிங், இரு பேருந்து நிலையங்களையும் இணைக்க நடைபாதை, கடைகள், புட் கோர்ட் ஆகியவையும் உக்கடம் பேருந்து நிலையத்தில் அமைய உள்ளன.

உக்கடம் பேருந்து நிலையத்தை அமைக்க தமிழக அரசு ரூ.23 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், கட்டுமானத்திற்கான டெண்டர் கோரியுள்ளது கோவை மாநகராட்சி.

ஜூலை 8ம் தேதி டெண்டர் சமர்ப்பிக்க கடைசி நாள் என்றும் கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisement

புதிய பேருந்து நிலையம் அமைக்கும் போது மெட்ரோ நிலையத்திற்கான வசதிகளை முன்கூட்டியே ஏற்படுத்துவதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News