கோவை-பெங்களூரு ரயில்கள் சேவையில் மாற்றம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை: பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக கோவை-பெங்களூரு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

ஓசூற் ரயில் நிலையம் அருகே உள்ள மரணாயணஹள்ளி ரயில்வே யார்டில் கட்டட வேலைகள் நடைபெற உள்ளன. இதில், பாலம் அமைக்கும் பணிக்காக RCC (Reinforced Cement Concrete) பாகங்கள் நிறுவப்பட உள்ளது.

இதற்கான பணிகள் நடைபெறுவதால், வரும் ஜூலை மாதம் 6ம் தேதி சில முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட உள்ளன.

Advertisement

இந்த மாற்றுப்பாதை காரணமாக, பெங்களூரு கன்டோன்மென்ட் – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – சேலம் அனரிசர்வ்டு எக்ஸ்பிரஸ், மற்றும் SMVT பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தங்களது வழக்கமான பாதைகளைத் தவிர்த்து கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட், திருப்பத்தூர் போன்ற வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

இந்த மாற்றத்தினால், ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் ஜூலை 9ம் தேதி நிற்காது.

மேலும், கோயம்புத்தூர் – லோக்மான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் கோயம்புத்தூர் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ஓசூர் மற்றும் தர்மபுரி ரயில் நிலையங்களைத் தவிர்த்து திருப்பத்தூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம் ஆகிய வழிகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தவறான பாதைகளில் செல்லாமல் இருக்க, ரயில்வே அதிகாரிகள் வழிகாட்டும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp