கோவை: கோவையில் தெருநாய் மீது மோதிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை பட்டேல் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று படுகாயத்துடன் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விலங்குகள் நல உறுப்பினர் சந்திரவதனா என்பவர் அந்த நாயை மீட்டு சிகிச்சை அளித்தார்.
தொடர்ந்து அவர் விலங்குகள் நல நிர்வாகி பன்னிமடையை சேர்ந்த பிரியா (52) என்பவருக்கு தகவல் தெரிவித்தர். அவர் நாய் எவ்வாறு படுகாயம் அடைந்தது என விசாரணை செய்து வந்தார்.
அதில் லாரி மோதி நாய் படுகாயம் அடைந்திருந்ததை கண்டு பிடித்தார். இதையடுத்து நாயை மோதி விட்டு சென்ற லாரி மீது நடவடிக்கை எடுக்கும் படி காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் லாரி டிரைவர் செல்வக்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.