கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. காவல் ஆணையாளர் சரவண சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவல்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், காவலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காவலர்கள் அனைவருக்கும் ஒரு மணி நேரமாக யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், மற்றும் ஆசனங்கள், முத்திரைகள் பயிற்சி அளிக்கப்பட்டது. தினமும் யோகா பயிற்சியில் செய்தால் மன அழுத்தம் இன்றி ஆரோக்கியமாக வாழலாம் என்றும் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்றும் யோகா ஆசிரியர் அறிவுறுத்தினார்.

இதேபோல் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.